ஸ்ரீலரெ நிர்வகிக்கப்பட்ட சேவைகள் ஒருங்கிணைக்கப்பட்ட தரவு, குரல்வழி மற்றும் காணொளி தீர்வுகளை வழங்குகின்றன. ஸ்ரீலரெ நிர்வகித்த சேவைகள் மூலம் நீங்கள் உங்கள் முழு தொடர்பாடல் உட்கட்டமைப்பு வேலைகளை செய்வதற்கு ஸ்ரீலரெ வை நியமித்து, உங்கள் மைய வணிகத்தில் கவனஞ்செலுத்தலாம். அதேநேரம் நாம் உங்கள் உட்கட்டமைப்பினையும் வேறு சேவைகளையும் தேவையான சேவைமட்டங்களில் நிர்வகிக்கிறோம்.
BizApps
BizChat
RemoteViewer
MyWeb
PeoTV
BizApps
BizApps என்பது கணிணிமுகிலை அடிப்படையாகக் கொண்ட SaaS (Software as a Service) ஆகும். சிறிய மற்றும் நடுத்தர வணிகமுயற்சிகளுக்கென வடிவமைக்கப்பட்ட இதன்மூலம், அவைகள் எந்த மூலதன முதலீடுகளுமின்றி தமது வணிக செயற்பாடுகளைத் தன்னிச்சையாகச் செய்யலாம்.
BizApps மூலம், வணிகச் செயலிகளைப் பராமரிப்பதன் மனப்பழுவிலிருந்து உங்களை விடுவிக்கிறோம். நீங்கள் இனிமேலும் செலவுமிகுந்த வழங்கிகளை வாங்கத்தேவையில்லை. தொழில்நுட்ப செயலாற்றல்களைப் பெற்று அமைவடிவாக்கம் செய்து நிர்வகிக்கத்தேவையில்லை. power/AC/space & security போன்ற உட்கட்டமைப்பு மூலவளங்களைப்பற்றிக் கவலைப்படத்தேவையில்லை. வேகமான சேவைகளை உறுதிப்படுத்தும் BizApps, உங்கள் தேவைகளுக்கேற்றதும் பொருத்தமான விலைகளைக்கொண்டதுமான நெகிழ்வுத்தன்மை கொண்ட பொதிகளை பல்வகையான விருப்பத்தெரிவுகளிலிருந்து பெறுவதற்கான "pay as you grow" மாதிரியை வழங்குகிறது. அத்துடன் உங்கள் பொதியை எந்தவித தொழில்நுட்ப அனுபவமுமின்றியே தரமுயர்த்துவதற்கான, தரமிறக்குவதற்கான சுதந்திரமுண்டு. இச்சேவையை எங்கிருந்தும் இணையம் மூலம் அணுகலாம்.